புதன், 7 ஏப்ரல், 2010
வயசுக்கு வந்தாச்சு;ஆனா மூளைக்கு என்னாச்சு?!"
“ஆத்தா நான் பாசாயிட்டேன்”னு ஊர் முழுக்க கேக்குற மாதிரி கத்தி சொல்லலாம். ஆனா, “ஆத்தா நான் வயசுக்கு வந்துட்டேன்”னு யாரும் ஊருக்கெல்லாம் கேக்குற மாதிரி சத்தம் போட்டு சொல்றதில்ல! ஏன்னா, முதல்ல சொன்னது கொண்டாடப்பட வேண்டிய சந்தோஷம், ரெண்டாவது சொன்னது வெளியில் சொல்லமுடியாத, ஒரு இனம்புரியாத உணர்வு!
Continue Reading...
புதன், 6 ஏப்ரல், 2010
அறிவை வளர்க்க “மூளை” மாத்திரைகள்?!.
சின்ன வயசுல, என்னை மாத்திரை விழுங்க வைக்கிறதுக்குள்ள எங்கம்மாவுக்கு போதும் போதும்னு ஆயிடும். ஏன்னா, நாம மாத்திரை விழுங்காம தப்பிக்கிறதுல பெரிய கில்லாடி. இப்படித்தான் ஒரு முறை எதோ ஒரு உடல் உபாதைக்கு மாத்திரை சாப்பிட சொன்னப்போ, சாப்பிடவே மாட்டேன்னு ஓடிக்கிட்டு இருந்திருக்கேன். [...]
Continue Reading...
வியாழன், 20 மே, 2010
பால்; எலும்புகளின் ரகசிய ஸ்நேகிதியோ?!
நாம எல்லாருமே தினமும் பால் குடிக்கிறோம். அது வெறும் பாலாகவோ, காப்பியாகவோ, டீயாகவோ அல்லது காம்ப்ளான், ஹார்லிக்ஸ், பூஸ்ட் மாதிரியான சத்து பானங்களாகவோ இப்படி எதாவது ஒரு விதத்துலதான் இருக்கு இல்லீங்களா?
அதெல்லாம் சரி, ஆனா ஏன் பால் குடிக்கிறோம் அல்லது ஏன் குடிக்கனும்னு யாராவது கேட்டா நாம என்ன சொல்லுவோம்?
[...]
Continue Reading...
வியாழன், 20 மே, 2010
ஒளிந்து விளையாடு; எய்ட்ஸ் (HIV) கிருமியும் மேக்ரோஃபேஜஸும்?!
நம்ம தமிழ் சினிமாவுல, எங்கிட்ட மோதாதே, மோதி விளையாடு இப்படியெல்லாம் படம் எடுத்திருக்காய்ங்கன்னு உங்களுக்கு தெரியும். ஆனா, இதெல்லாம் யாருக்காக? எதிரிகள பறந்து பறந்து அடிக்கிற, ஒரே ஆளா 50 பேர சும்மா புரட்டி எடுக்குற(?) தமிழ் சினிமா ஹீரோக்களுக்காக. நேருக்கு நேரா நின்னு, எதிரிகளோட மோதி ஜெயிக்கிறாகளாமாம்?!
[...]
Continue Reading...
வியாழன், 20 மே, 2010
ஒளிந்து விளையாடு; எய்ட்ஸ் (HIV) கிருமியும் மேக்ரோஃபேஜஸும்?!
நம்ம தமிழ் சினிமாவுல, எங்கிட்ட மோதாதே, மோதி விளையாடு இப்படியெல்லாம் படம் எடுத்திருக்காய்ங்கன்னு உங்களுக்கு தெரியும். ஆனா, இதெல்லாம் யாருக்காக? எதிரிகள பறந்து பறந்து அடிக்கிற, ஒரே ஆளா 50 பேர சும்மா புரட்டி எடுக்குற(?) தமிழ் சினிமா ஹீரோக்களுக்காக. நேருக்கு நேரா நின்னு, எதிரிகளோட மோதி ஜெயிக்கிறாகளாமாம்?!
இப்படியே பார்த்துப் பார்த்துப் போன உங்களுக்கு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் ஒரு படையான, வெள்ளை ரத்த அனுக்களின் அசுர தாக்குதலிலிருந்து தப்பிக்க, HIV எய்ட்ஸ் கிருமி வில்லனின் படைகள் பயன்படுத்துற, ராஜ தந்திரமான ஒரு போர் யுக்திய அறிமுகப்படுத்தலாம்னு, நெனச்சேன்.
இன்றைய பதிவுல, நோய் எதிர்ப்பு படைக்கும், உடலைத் தாக்கும் கிருமிகளுக்கும் (HIV வைரஸ்) நடக்கிற ஒரு சுவாரசியமான யுத்தத்தைப் பத்தித்தான் இனிமே நாம பார்க்கப்போறோம். என்ன, நீங்க ரெடியா?
HIV என்னும் ஒரு புரியாத புதிர்?!
அனுவைப் பிளந்து, மரபனுக்களையெல்லாம் சும்மா பிரிச்சி மேயுற விஞ்ஞானிகளையே முழி பிதுங்க வைக்கிற எத்தனையோ வைரஸ் கிருமிகள்ல, எய்ட்ஸ் வைரஸ் HIVக்குத்தான் எப்பவுமே முதலிடம். கடந்த 1981-ல மருத்துவ உலகத்துக்கு அறிமுகமாகி, கிட்டத்த்தட்ட 30 வருடங்களா மனுசனுக்கு தண்ணிக் காட்டிக்கிட்டு இருக்குற HIV வைரஸ் ஒரு எமகாதகன்னுதான் சொல்லனும்?!
ஏன்னா, மருந்துகளாலயும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி படையின் மூலமாகவும், எத்தனை விதமான போர் வியூகங்கள வகுத்துத் தாக்கினாலும், கற்பனைகூட செய்ய முடியாத அளவுக்கு, புதுசா புதுசா வித்த்கைகளப் பயன்படுத்தி, எல்லாத் தாக்குதல்களையும் முறியடிச்சி, "HIV ஆ கொக்கா"ங்கிற மாதிரி தப்பிச்சிக்கிட்டே இருக்கு இந்த எமகாதக HIV!
HIV, ஒரு எத்தனுக்கு எத்தன்!
எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் HIV வைரஸ், மனித உடலுக்குள் ஊடுருவி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அனுக்களான Immune cells/வெள்ளை ரத்த அனுக்களைத் தாக்கி, அவற்றினுள் சென்று விடுகின்றன. உள்ளே சென்ற பின் தன் ஹைஜாக் வேலையைத் தொடங்கி இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்துவிடும்! கிட்டத்தட்ட எல்லா வைரஸ்களும் மருந்துகளுக்கும், ரத்த அனுக்களின் அசுரத்தாக்குதலுக்கும் இரையானாலும், ரத்த அனுக்களில் உள்ளே சென்றுவிட்ட வைரஸ்கள் மட்டும் நோய் எதிர்ப்பு சக்தி படை மற்றும் (Antiviral) மருந்துகளின் கண்ணில் படாமல் தந்திரமாக தப்பித்து விடுகின்றன.
இப்படித் தப்பிக்கும் வைரஸ்கள்தான், எய்ட்ஸ் நோய்க்கு இன்றுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் போனதற்க்கு அடிப்படைக் காரணம். தப்பிக்கும் வைரஸ்களைத் தாக்கி அழிக்க மனிதன் புதுப்பது வழிகளைக் கண்டுபிடித்துத் தாக்கினாலும், அதி நவீன (?) யுக்திகளப் பயன்படுத்தி திரும்பவும் தப்பித்து விடுகின்றன. எப்படித் தப்பிக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்படும் ஆய்வுகள்தான், HIVயின் போர்வியூகத்தை உலகுக்கு வெளிச்சம் காட்டி, எய்ட்ஸை முற்றிலும் ஒழித்து விடலாம் எனும் நம்பிக்கையை அவ்வப்போது ஊட்டி வருபவை!
அந்த வரிசையில், CNRS, Institut Curie and Institut Pasteur என்னும் கல்வி நிறுவனத்தின் ஒரு ஆய்வில், ரத்த அனுக்களிடமிருந்து தப்பிக்க HIV வைரஸ் பயன்படுத்தும் தந்திர யுக்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! அது என்னன்னு பார்க்கிறதுக்கு முன்னாடி, உடலின் நோய் எதிர்ப்புசக்தி படைவீர ரத்த அனுக்களின் ஒரு சிறு அறிமுகம்....
உடலின் நோய் எதிர்ப்புசக்தி படைவீரர்கள்!
உடலைத் தாக்கும் ஒவ்வொரு நுண்கிருமியையும் அழிக்க, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மையம் பல்வேறு வெள்ளை ரத்த அனுக்களை பயன்படுத்துகின்றன. ஆனால், இந்த ரத்த அனுக்களைத் தாக்கி அழிக்கும் குணமுடைய வைரஸ்களுள் HIV-யும் ஒன்று! HIV தாக்கும் ரத்த அனுக்களில் , உள்புகும் கிருமிகளை (விழுங்கி) அழிக்கும் தன்மையுள்ளவை, முதல் நிலை படைவீரர்களான மேக்ரோஃபேஜஸ் (Macrophages) என்றழைக்கப்படும் ஒரு வகை வெள்ளை ரத்த அனுக்கள். இரண்டாம் நிலை படைவீரர்கள் CD4 T lymphocytes என்றழைக்கப்படும் டி அனுக்கள் (T cells)!
HIV வைரஸ்கள் உடலினுள் சென்றவுடன், முதல் வேலையாக முதல் நிலை படைவீரர்களான மேக்ரோஃபேஜஸ்களைத் தாக்கி, அவற்றினுள் ஒளிந்துகொண்டு, இனப்பெருக்கம் செய்கின்றன. அதன்பின், பெரும்படையாய் சென்று இரண்டாம் நிலை படைவீரர்களான டி அனுக்களைத் தாக்கி அழித்துவிடுகின்றன! அப்புறமென்ன, தொலைந்தான் எதிரின்னு வைரஸ்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான்!
அந்தக் கொடுமக்கூத்த நீங்களே பாருங்க இந்தக் காணொளியில.....
[youtube=http://www.youtube.com/watch?v=RO8MP3wMvqg&feature=related]
HIV-யின் அமிலத்தன்மை (pH) மாற்று போர்வியூகம்?!
HIV வைரஸ்களின் இப்படிப்பட்ட இருவேறு தாக்குதல்களுக்கு அடிப்படையான போர்வியூகம் என்ன அப்படீங்கிறத கண்டுபிடிக்க Philippe Benaroch என்னும் பாரீஸ் நாட்டு விஞ்ஞானி, சில ஆய்வுகளை மேற்கொண்டிருக்காரு. அந்த ஆய்வின் முடிவுல, HIV வைரஸ்களின் ஒரு சுவாரசியமான, எதிர்பாராத போர்வியூக யுக்தியை கண்டுபிடிச்சிருக்காரு!
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின், முதல் நிலை படைவீரர்களான மேக்ரோஃபேஜஸ்களினுள்ளே, பொதுவாக அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இந்த அமிலத்தன்மையில் HIV வைரஸ்களால் உயிர்வாழ முடியாது! ஆனால், மேக்ரோஃபேஜஸ்களைத் தாக்கி உள்ளே செல்லும் வைரஸ்கள், இயற்க்கையான அமிலத்தன்மையை குறைத்து தங்களின் இனப்பெருக்கத்துக்கு ஏதுவான ஒரு அமிலத்தன்மையை உருவாக்கிவிடுகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!
அமிலத்தன்மை குறைந்தவுடன், மேக்ரோஃபேஜஸினுள்ளே இருக்கும் கிருமி அழிக்கும் பல என்சைம்கள் செயலிழந்துவிடுகின்றனவாம்! அப்புறமென்ன, HIV வைரஸ்கள் எல்லாம் அல்லலும் போச்சு தொல்லையும் போச்சுன்னு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா இனப்பெருக்கம் செஞ்சு , உடலின் நோய் எதிர்ப்பு சக்தி படையை எல்லாம், மிகச் சுலபமா/மொத்தமா கபளீகரம் செஞ்சு, கடைசியில மனுசன பல விதமான நோய்க்கிருமிகளுக்கும்/நோய்களுக்கும் இரையாக்கிவிடுகின்றன! அது சரி, இதானா மேட்டரு?!
என்னங்க, இப்போ புரியுதுங்களா HIV வைரஸோட ராஜ தந்திரமும், போர்வியூகமும்?
"என்னத்தப் புரிஞ்சி என்ன செய்ய. அதான் இன்னும் எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபுடிக்கலையே" அப்படீன்றீங்களா? கவலப்படாதீங்க, இந்த போர்வியூகத்த தடை செய்ய மருந்துகள கண்டுபிடிக்க, ஆய்வுகள ஆரம்பிச்சிட்டாங்க விஞ்ஞானிங்க! கூடிய சீக்கிரமே கண்டுபிடிச்சிருவாங்கன்னு நம்பிக்கையோட இருப்போம்!
ஆனா, அதுக்கு முன்னாடி, இதன் தொடர்ச்சியான அடுத்தப் பதிவுல, இப்போதைக்கு நடைமுறையில இருக்குற ஒரு எய்ட்ஸ் மருந்து/சிகிச்சை முறையைப் பத்தி விரிவாப் பார்ப்போம். அதுவரைக்கும் கொஞ்சம் காத்திருங்க.....
லேபிள்கள்:
எய்ட்ஸ்,
வைரஸ்,
AIDS,
HIV,
Immune system,
Macrophages
பால்; எலும்புகளின் ரகசிய ஸ்நேகிதியோ?!
நாம எல்லாருமே தினமும் பால் குடிக்கிறோம். அது வெறும் பாலாகவோ, காப்பியாகவோ, டீயாகவோ அல்லது காம்ப்ளான், ஹார்லிக்ஸ், பூஸ்ட் மாதிரியான சத்து பானங்களாகவோ இப்படி எதாவது ஒரு விதத்துலதான் இருக்கு இல்லீங்களா?
அதெல்லாம் சரி, ஆனா ஏன் பால் குடிக்கிறோம் அல்லது ஏன் குடிக்கனும்னு யாராவது கேட்டா நாம என்ன சொல்லுவோம்?
நீங்க என்ன சொல்லுவீங்கன்னு எனக்கு அப்புறமா தெரியப்படுத்துங்க. ஆனா, இப்படி யாராவது என்னைக் கேட்டா நான் என்ன சொல்லுவேன்னு கேட்டீங்கன்னா, முதல்ல சத்துக்காகத்தான்னு குத்து மதிப்பா (?) சொல்லிட்டு, திரும்பவும் என்ன சத்துக்காகன்னு கேட்டா, வைட்டமின் A அப்புறம் கால்சியம், பொட்டாசியம், இரும்பு இப்படி சில தாதுக்கள் (minerals) போன்றவற்றிற்க்காக அப்படின்னுதான் சொல்லுவேன்!
ஏன்னா, உயிர்வேதியல்ல எவ்வளவுதான் பால் பத்தி பிரிச்சி மேஞ்சி படிச்சிருந்தாலும், திடீர்னு யாராவது கேட்டா என்னால இவ்வளவுதான் சொல்ல முடியும்! ஆனா, சமீபத்துல ஒரு நாள் பேசிக்கிட்டிருக்கும்போது, என்னோட சகோதரர்(அவரும் ஒரு ஆராய்ச்சியாளர்), "பால் எல்லாம் குடிக்கிறது சுத்த வேஸ்ட், ஏன்னா சொல்லிக்கிற மாதிரி அதுல ஒன்னும் பெருசா சத்து/உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான விஷயங்கள்னு எதுவும் இல்லைன்னு சொல்லிட்டாரு?!
அவர் இப்படிச் சொன்னவுடனே எனக்கு, என்னடா இது கொடுமையா இருக்கேன்னு ஆகிப்போச்சு! என்ன உங்களுக்கும்தானே? ஆமாங்க, ஏன்னா பொறந்ததுலேர்ந்து நம்மில் பலர், எதாவது ஒரு வகையில பால் குடிச்சிக்கிட்டுதான் வந்திருக்கோம் இல்லீங்களா? அப்படியிருக்கும்போது, பாலில் அத்தியாவசியமான சத்துக்கள் எதுவும் இல்லைன்னு ஒருத்தர் சொன்னா, அதை எப்படி ஏத்துக்க முடியும்?
இப்படி உடனே கேட்டேனே தவிர, அதுல இருக்குற உண்மையை தெரிஞ்சிக்க முயற்ச்சி பண்ணல. ஆனா, பாலில் உண்மையாவே உடலுக்கு அத்தியாவசியமானது எதாவது இருக்கா, இல்ல சும்மா பேருக்குத்தான் இதுவரைக்கும் அதைக் குடிச்சிக்கிட்டு வர்றோமான்னு ஒரு கேள்வி மட்டும் இருந்துக்கிட்டே இருந்திச்சி!
சமீபத்துல, அந்தக் கேள்விக்கு பதில் சொல்ற விதமா ஒரு ஆய்வறிக்கை ஒன்னு வெளியாகியிருந்தது. அதப் பார்த்த உடனே, ஆகா....இதத்தானே இவ்வளவு நாளா எதிர்ப்பார்த்திருந்தேன்னு படிச்சேன். அதுல இருக்குற சில முக்கியமான விஷயங்கள உங்ககூட பகிர்ந்துக்கலாமுன்னு இந்தப் பதிவ எழுதறேன். வாங்க, அப்படியே பாலுக்குள்ள ஒரு உயிர்வேதியல் பயணம் போயிட்டு வரலாம்.....
பாலின் சத்துக்கள், ஒரு பார்வை!
பாலில் உள்ள சத்துக்கள் குறித்த, அமெரிக்க உணவுத்தர நிர்ணய நிறுவனத்தின் அட்டவணை கீழே.....
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பார்த்தீங்கன்னா, வைட்டமின் A மற்றும் B12, சோடியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்ஃபரஸ் மற்றும் மெக்னீசியம் ஆகியவைதான் அதிக அளவில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. *பாலில் உள்ள வைட்டமின் D-யின் அளவு இங்கே குறிப்பிடப்படவில்லை. ஏன்னா, ஒவ்வொரு வகையான பாலிலும், வைட்டமின் D வெவ்வேறு அளவில் இருப்பதால் குறிப்பிடவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது!
சமீபத்திய ஒரு அமெரிக்க ஆய்வுப்படி, 2 வயது முதலான 16,000 அமெரிக்கர்களின் உணவில், அதிகப்படியான வைட்டமின் D யைக் கொடுப்பது பால் மட்டுமே என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! 2 வயது முதல் 18 வயதினருக்கு தேவையான வைட்டமின் D-யில் மூன்றில் இரண்டு பங்கு பாலிலிருந்தே பெறப்பட்டிருக்கிறது அப்படீன்னும் கண்டுபிடிச்சிருக்காங்க!
அதுமட்டுமில்லாம, பால் தவிர்த்த உணவுகளில் வைட்டமின் D-யினை, அதிக அளவு தரக்கூடியவை சில மட்டுமே அப்படீன்னு சொல்றாரு உணவுக்கட்டுப்பாடு, குழந்தைநல மருத்துவர் கெய்த் அயூப்! மேலும் அவர், பாலில்லாத உணவுப்பழக்கத்தில், உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்களை பெருவது மிகவும் கடினம் என்றும், அவற்றில் மிக மிக முக்கியமானது வைட்டமின் D என்றும் சொல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!
வைட்டமின் D-யும் உடல் ஆரோக்கியமும்!உடலுக்குத் தேவையான பல்வேறு உயிர்வேதியல் மாற்றங்களுக்கும், செரிமானத்துக்கும் முக்கியமானவை வைட்டமின்கள்! அத்தகைய வைட்டமின்கள் ஓவ்வொன்றுக்கும், உடலில் பல பகுதிகளின் ஆரோக்கியத்தில் ஒரு முக்கியமான பங்கு உண்டு. எந்தவொரு வைட்டமின் இல்லையென்றாலும், உடலில் ஒரு வகை உபாதை (vitamin deficiency disorders) ஏற்படும் என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்!
மனிதர்கள் உள்ளான முதுகெலும்புள்ள உயிரினங்களின் தோலில் உற்பத்தியாகும் ஒரே வைட்டமின், வைட்டமின் D என்பதாக அறிகிறேன். ஆனால், வைட்டமின் D-யானது தோலில் உற்பத்தியாவதற்க்கு, ultraviolet B என்னும் ஒரு குறிப்பிட்ட வகை அல்ட்ரா வயலெட் ஒளிக் கதிர்கள் தோலில் படவேண்டும். அதுமட்டுமல்லாமல், அப்படி தோலில் உற்பத்தியாகும் அளவு மிக குறைவு என்பதால், வைட்டமின் D நிறைந்த உணவுகளை ஒருவர் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்!
அப்படி எடுத்துக்கொள்ளவில்லையென்றால், முதலில் பாதிப்படைவது நம் எலும்புகளே! அதாவது, வைட்டமின் D குறைவினால் ஏற்படும் நோய்கள் இரண்டு. ரிக்கெட்ஸ் (Rickets) என்னும் ஒருவகை நோய், குழந்தைகளின் உடல் வளர்ச்சி, எலும்புகளின் வளர்ச்சி ஆகியவற்றை பாதிக்கும். ஆஸ்டியோமலேசியா (Osteomalacia) என்னும் மற்றொரு நோய், பெரியவர்களின் எலும்புகளை மெலிதாக்கி வலுவிழக்கச் செய்யும் தன்மையுடையது.
ஆனால், வைட்டமின் D-யானது எலும்புகளின் வளர்ச்சிமட்டுமல்லாது, நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு, இருதய நோய்கள் மற்றும் சிலவகை புற்று நோய்கள் என பல நோய்களை தோற்றுவிப்பதிலும், உடலின் நோய்எதிர்ப்பு சக்தியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறது இதுவரையிலான வைட்டமின் D ஆய்வு! மேலும் விரிவானதொரு விளக்கத்துக்கு இங்கு செல்லுங்கள்
வைட்டமின் D குறித்த ஒரு கருத்துச்செறிவுள்ள காணொளியைக் கீழே பாருங்க....
[youtube=http://www.youtube.com/watch?v=b0BgxNstkFI&feature=related]அமெரிக்கர்களில் நடத்திய இந்த ஆய்வில், அமெரிக்கர்களில் பாதிபேர் வைட்டமின் D குறைபாடுள்ளவர்களே என்று கண்டறியப்பட்டுள்ளது! ஒருவருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள வைட்டமின் D அளவு 400IU, அதாவது 4 குவளை பாலிலுள்ள வைட்டமின் D அளவு!
என்னங்க, இப்போ சொல்லுங்க. பால் குடிக்கிறதுல எதாவது பலன் இருக்கா, இல்ல ஒன்னுமே இல்லியா?! எனக்குத் தெரிஞ்ச/புரிஞ்சவரைக்கும் பால் எலும்புகளோட ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ரகசிய ஸ்நேகிதின்னுதான் தோனுது!
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

