prev next

புதன், 7 ஏப்ரல், 2010

அறிவை வளர்க்க “மூளை” மாத்திரைகள்?!

சின்ன வயசுல, என்னை மாத்திரை விழுங்க வைக்கிறதுக்குள்ள எங்கம்மாவுக்கு போதும் போதும்னு ஆயிடும். ஏன்னா, நாம மாத்திரை விழுங்காம தப்பிக்கிறதுல பெரிய கில்லாடி. இப்படித்தான் ஒரு முறை எதோ ஒரு உடல் உபாதைக்கு மாத்திரை சாப்பிட சொன்னப்போ, சாப்பிடவே மாட்டேன்னு ஓடிக்கிட்டு இருந்திருக்கேன். சரி, இவன்கிட்ட சாதுவா பேசினா வேலைக்காகாதுன்னு அதிரடியா என்னோட அக்காவை என்னை பிடிச்சிக்க சொல்லிட்டு மாத்திரையை போட முயற்ச்சி செஞ்சுருக்காங்க.
நாம யாரு….சிங்கமுல்ல, எதேதோ சத்தம் போட்டு ஒன்னும் முடியலைன்ன உடனே, யாருக்குமே புரியாத ஒரு வார்த்தையை சொல்லி சத்தம் போட்டு கத்தியிருக்கேன். ஒன்னும் புரியாத அம்மா, “ஐய்யய்யோ என் பையனுக்கு என்னவோ ஆயிடுச்சு அவனை விடு”, அவன் மாத்திரை சாப்பிடலைன்னா பரவாயில்லைன்னு சொல்லி விட்டுட்டாங்க. அப்புறம் எப்பவும்போல ஜாலியா ஐயா ஊர் சுத்தக் கெளம்பிட்டேன்?!.
ரெண்டு நாள் கழிச்சு என்கிட்ட அம்மா, “டேய் என்னடா சொன்னே அன்னிக்கு மாத்திரை சாப்பிட சொன்னப்போ”ன்னு கேட்டாங்க. ரொம்பச் சாதரணமா தெரியாதுன்னு சொல்லிட்டேன். (உண்மை என்னன்னா, என்ன சொன்னேன்னு இதுவரைக்கும் எனக்கே தெரியாது?!)
ஏன் இந்தக் கதையைச் சொல்றேன்னா, பொதுவா சின்ன வயசுல நம்மில் பல பேரு, மாத்திரை விழுங்க நெறைய அடம்பிடிப்போம். காரணம் என்னன்னா, மாத்திரை கசக்கும் அப்படீங்கிற ஒரு சின்ன விஷயம்தான். (இந்தக் காலத்துல அனேகமா, குழந்தைங்க அடம் பிடிக்காம சாப்பிடுற மாதிரி மாத்திரைகள் வந்தாச்சுன்னு நெனக்கிறேன்.) சரி பதிவுச் செய்திக்கு வருவோம்….
“மூளை” மாத்திரைகள் (Brain pills)!
பொதுவா மாத்திரை எதுக்கு கொடுக்குறாங்க? ஒன்னு உடல் உபாதைக்காக அப்படி இல்லைன்னா, உடலில் சக்தி ஏற்படுவதற்க்காக. உதாரணமா, வைட்டமின், தாது மாத்திரைகளச் சொல்லலாம். ஆனா, உங்களுக்கு தெரியுமா இப்பெல்லாம் “அறிவை” வளர்க்க (?) மாத்திரை சாப்பிடுகிறார்களாம். இந்த பழக்கம் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள்ல சமீபகாலமா வழக்கத்துல இருக்குதாம்.
இந்த மாத்திரைகள யாரு, எப்போவெல்லாம் சாப்பிடுறாங்கன்னு பார்த்தா,
  • கல்லூரி மாணவர்களும், பெரிய நிறுவன மேலதிகாரிகளும் தத்தம் அறிவு சார்ந்த செயல்களை மேம்படுத்துவதற்க்காக சாப்பிடுறாங்களாம். அப்படியா…?!
இதுல வேடிக்கை என்னன்னா, இந்த வகையான மாத்திரைகள் FDA போன்ற அரசு கண்கானிப்பு நிறுவனங்களால் பரிந்துரைக்கப்படவில்லை அப்படீங்கிறதுதான். ஆனாலும், சில அறிவியல் வல்லுனர்கள் மற்றும் நரம்பியல் நிபுனர்களும் இத்தகைய “அறிவு ஊக்கி” மாத்திரைகளை, டிமென்ஷியா(Dementia) போன்ற நோய்களால் பாதிக்கப்படாத, ஆரோக்கியமான மக்களும் உட்கொள்ளலாம் அப்படீன்னு சொல்றாங்களாம்! என்ன கொடுமை சரவணன் இது?!
இது இப்படியிருக்க, ஒருவருடைய மூளைச் செயல்பாட்டினை பாதிக்கும் எந்தவொரு மருந்து/மாத்திரையையும், நாம் தினம் உட்கொள்ளும் காபி/தேனீர் போல உட்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள் அல்லது அம்மருந்துகள் பாதுகாப்பானதுதானா என்பதைப் பற்றிய கேள்விகள் இன்னும் விடையில்லாக் கேள்விகளாகவே இருக்கின்றன என்பதுதான் நிதர்சனம்?!
இதையெல்லாம் படிச்சிட்டு உங்கள்ல சிலர், “ஆமா, சும்மா கெடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டிங்கிற மாதிரி, எதுக்கு இந்த வீண் விஷப்பரீட்சை எல்லாம்” அப்படீன்னு கேக்கலாம். அதாவது, நம்ம பெரியவங்க சொல்லியிருக்காங்க, “ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுன்னு”, அப்படித்தான் இதுவும்.
நாளைய H+ மனிதன்!
ஏன் அப்படிச் சொல்றேன்னா, இந்த மூளை மாத்திரை மாதிரியான விஷயங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் H+ மனிதன் அப்படீங்கிற ஒரு மேம்படுத்தப்பட்ட மனிதனுக்கான தேடல். அதாவது, சுருக்கமா சொல்லனும்னா “மனிதன்+” அப்படீங்கிற ஒரு “புத்துலக மனித வடிவம்”னு வச்சிக்குங்களேன். நாம இதப்பத்தி இன்னும் விரிவா அடுத்த பதிவுல பார்ப்போம்!
இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா, மூளையோட செயல்பாட்டை அதிகரிக்க மாத்திரையெல்லாம் கண்டுபிடிச்சி சாப்பிட ஆரம்பிச்சிட்டதுனால, அடுத்த மனிதனுக்கான தேடல் வெறும் பேச்சளவில இல்லாம செயல்வடிவத்துல வெளிப்பட ஆரம்பிச்சாச்சு மக்களே!
யைச் சொல்றேன்னா, பொதுவா சின்ன வயசுல நம்மில் பல பேரு, மாத்திரை விழுங்க நெறைய அடம்பிடிப்போம். காரணம் என்னன்னா, மாத்திரை கசக்கும் அப்படீங்கிற ஒரு சின்ன விஷயம்தான். (இந்தக் காலத்துல அனேகமா, குழந்தைங்க அடம் பிடிக்காம சாப்பிடுற மாதிரி மாத்திரைகள் வந்தாச்சுன்னு நெனக்கிறேன்.) சரி பதிவுச் செய்திக்கு வருவோம்….
“மூளை” மாத்திரைகள் (Brain pills)!
"மூளை மாத்திரைகள்" படம்:istockphoto
பொதுவா மாத்திரை எதுக்கு கொடுக்குறாங்க? ஒன்னு உடல் உபாதைக்காக அப்படி இல்லைன்னா, உடலில் சக்தி ஏற்படுவதற்க்காக. உதாரணமா, வைட்டமின், தாது மாத்திரைகளச் சொல்லலாம். ஆனா, உங்களுக்கு தெரியுமா இப்பெல்லாம் “அறிவை” வளர்க்க (?) மாத்திரை சாப்பிடுகிறார்களாம். இந்த பழக்கம் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள்ல சமீபகாலமா வழக்கத்துல இருக்குதாம்.
இந்த மாத்திரைகள யாரு, எப்போவெல்லாம் சாப்பிடுறாங்கன்னு பார்த்தா,
  • கல்லூரி மாணவர்களும், பெரிய நிறுவன மேலதிகாரிகளும் தத்தம் அறிவு சார்ந்த செயல்களை மேம்படுத்துவதற்க்காக சாப்பிடுறாங்களாம். அப்படியா…?!
இதுல வேடிக்கை என்னன்னா, இந்த வகையான மாத்திரைகள் FDA போன்ற அரசு கண்கானிப்பு நிறுவனங்களால் பரிந்துரைக்கப்படவில்லை அப்படீங்கிறதுதான். ஆனாலும், சில அறிவியல் வல்லுனர்கள் மற்றும் நரம்பியல் நிபுனர்களும் இத்தகைய “அறிவு ஊக்கி” மாத்திரைகளை, டிமென்ஷியா(Dementia) போன்ற நோய்களால் பாதிக்கப்படாத, ஆரோக்கியமான மக்களும் உட்கொள்ளலாம் அப்படீன்னு சொல்றாங்களாம்! என்ன கொடுமை சரவணன் இது?!
இது இப்படியிருக்க, ஒருவருடைய மூளைச் செயல்பாட்டினை பாதிக்கும் எந்தவொரு மருந்து/மாத்திரையையும், நாம் தினம் உட்கொள்ளும் காபி/தேனீர் போல உட்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள் அல்லது அம்மருந்துகள் பாதுகாப்பானதுதானா என்பதைப் பற்றிய கேள்விகள் இன்னும் விடையில்லாக் கேள்விகளாகவே இருக்கின்றன என்பதுதான் நிதர்சனம்?!
இதையெல்லாம் படிச்சிட்டு உங்கள்ல சிலர், “ஆமா, சும்மா கெடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டிங்கிற மாதிரி, எதுக்கு இந்த வீண் விஷப்பரீட்சை எல்லாம்” அப்படீன்னு கேக்கலாம். அதாவது, நம்ம பெரியவங்க சொல்லியிருக்காங்க, “ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுன்னு”, அப்படித்தான் இதுவும்.
நாளைய H+ மனிதன்!
ஏன் அப்படிச் சொல்றேன்னா, இந்த மூளை மாத்திரை மாதிரியான விஷயங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் H+ மனிதன் அப்படீங்கிற ஒரு மேம்படுத்தப்பட்ட மனிதனுக்கான தேடல். அதாவது, சுருக்கமா சொல்லனும்னா “மனிதன்+” அப்படீங்கிற ஒரு “புத்துலக மனித வடிவம்”னு வச்சிக்குங்களேன். நாம இதப்பத்தி இன்னும் விரிவா அடுத்த பதிவுல பார்ப்போம்!
இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா, மூளையோட செயல்பாட்டை அதிகரிக்க மாத்திரையெல்லாம் கண்டுபிடிச்சி சாப்பிட ஆரம்பிச்சிட்டதுனால, அடுத்த மனிதனுக்கான தேடல் வெறும் பேச்சளவில இல்லாம செயல்வடிவத்துல வெளிப்பட ஆரம்பிச்சாச்சு மக்களே!

வயசுக்கு வந்தாச்சு;ஆனா மூளைக்கு என்னாச்சு?!

“ஆத்தா நான் பாசாயிட்டேன்”னு ஊர் முழுக்க கேக்குற மாதிரி கத்தி சொல்லலாம். ஆனா, “ஆத்தா நான் வயசுக்கு வந்துட்டேன்”னு யாரும் ஊருக்கெல்லாம் கேக்குற மாதிரி சத்தம் போட்டு சொல்றதில்ல! ஏன்னா, முதல்ல சொன்னது கொண்டாடப்பட வேண்டிய சந்தோஷம், ரெண்டாவது சொன்னது வெளியில் சொல்லமுடியாத, ஒரு இனம்புரியாத உணர்வு!

ஆனா, சங்கர் பட “பசங்க” மாதிரி “எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணுமடா”ன்னு ஊரெல்லாம் பாடிட்டு திரியலாம் தப்பில்ல. ஏன்னா, அது வாலிப வயசு, ஹார்மோன் பண்ற சேட்டை, மனசு சொன்ன பேச்சக் கேக்காத வயசு, புது ரத்தம் அப்படியே மடைதிறந்த வெள்ளம் மாதிரி பாயுற பருவம், சுதந்திரத்தை முழுசா அனுபவிக்க வேண்டிய காலம்னு இப்படி இன்னும் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம் வயசுக்கு வர்றதப் பத்தியும், அந்த வயசோட குணாதீசியங்கள் பத்தியும்.

வயசு பசங்களோ பொண்ணுங்களோ, பொதுவா உலகம் (சமுதாயம்) அவங்களப் பத்தி நெனக்கிறது என்னன்னா, “கிடைக்கிற சுதந்திரத்தை தவறா பயன்படுத்தி, முட்டாள்தனமா பல வேலைகளை செஞ்சுட்டு, வாழ்க்கையில அடுத்து என்ன பண்றதுன்னு புரியாம நிற்க்கிற பசங்க அப்படீன்னுதான்?!

இந்தக் கருத்து, வயசுப்பசங்க (ஒரு சில பேருக்குத்தானே தவிர) எல்லாருக்கும் பொருந்தாது அப்படீன்னு சொல்லுது சமீபத்திய ஆய்வு ஒன்னு! வயசுக்கு வருகிற ஆணோ பெண்ணோ, எனக்குத் தெரிஞ்சவரைக்கும் புற உடல் மாற்றங்களைப் பத்திதான் நாம எல்லாருமே அதிகம் ஆர்வப்பட்டு/கேள்விப்பட்டிருக்கோமே தவிர, அக-உடல் அல்லது மிக முக்கியமா “மூளையில்” எந்தவிதமான மாற்றங்கள் ஏற்படும் அப்படீன்னு நம்மில் பலருக்கு (ஏன் யாருக்குமே) இதுவரைக்கும் தெரியாதுங்கிறதுதான் உண்மை!

பருவமடைதல்/பூப்படைதலின்போது மூளையில் ஏற்படும் மாற்றங்கள்!

பொதுவா இருக்கிற கருத்துப்படி, பருவமடையும் ஒவ்வொருவரும் முட்டாள்தனமான பல காரியங்களை செய்வது என்பது முற்றிலும் உண்மையல்ல! ஆனா, “மூளையின் கற்க்கும் திறன் குறைந்துபோகிறது” என்பதுதான் அறிவியல்பூர்வமான உண்மை அப்படீன்னு சொல்றாரு ஆய்வாளர் ஹியூ ஷென்!

பருவமடைதலின் போது மூளையில் ஏற்படும், அனு அளவிலும், மூலக்கூறு அளவிலுமான மாற்றங்கள்தான் பருவயதினரின் முட்டாள்தனமான காரியங்களுக்கு அடிப்படைக் காரணம்னு கண்டுபிடிச்சிருக்காரு திரு.ஷென்.

மூளையின் “ஹிப்போகேம்பசும்” கற்றலும்!

கல்வி அல்லது கற்றல் அப்படீங்கிற விஷயம் மூளையோட “ஹிப்போகேம்பஸ்” என்னும் பகுதியில் நடக்கிறது. மூளையில் இந்தப் பகுதி நியாபகச் சக்திக்கு அடிப்படையானது என்பது குறிப்பிடத்தக்கது! கல்வி/கற்பது என்னும் செயலை அனு அளவில் நோக்கினால், நரம்புகளுக்கு இடையிலான தொடர்பு உறுதியாக்கப்படும் போதுதான் கற்றல் என்பது சாத்தியமாகிறது!

நரம்புகளின் தொடர்புகளை பாதிக்கும்/சேதப்படுத்தும் எந்தவொரு செயலும் , நியாபகங்கள் உருவாகாமல் தடுத்துவிடும். அத்தகையதொரு நிகழ்வுதான் பருவமடைதல் என்பது. அதாவது, பருவமடைதலின்போது கற்றலின் அடிப்படை காரணிகள் பாதிக்கப்படுகின்றன, விளைவாக கல்வி/கற்க்கும் திறன் குறைந்துபோகிறது என்கிறது எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வு!

“காபா”வும் கல்வியும்!

நரம்புகளை பாதிக்கும் எந்தவொரு செயலும்னு சொல்லிட்டு அது என்னன்னு சொல்லலைன்னா நல்லாயிருக்காதில்லீங்களா?! எலிகளில் நடத்திய ஆய்வு முடிவுகளின்படி, பருவமடைதலின்போது மூளையின் ஹிப்போகேம்பசில் “காபா ரிசெப்டர் (GABA receptor)” என்னும் ஒரு வகை புரதமானது அதிகப்படியாக உற்பத்தியாகிறதாம். இந்த காபா புரதம்தான், கல்விக்கு அடிப்படையான நரம்புகளின் தொடர்புகளை பாதிக்கின்றனவாம்.

“ஐய்யய்ய….அப்படியா? இதை தடுக்க வேற வழியே இல்லீயா? அப்படீன்னா, வயசுப்பசங்க (எலிங்க) முட்டாள்தனமான சில விஷயங்களச் செஞ்சுக்கிட்டேதான் இருப்பாய்ங்களா?” அப்படீன்னு நீங்க கேட்டீங்கன்னா, உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்குன்னு சொல்றாரு ஷென்!

அது என்னன்னா, காபா புரதத்தை அழிக்கும்/செயலிழக்கச் செய்யும் ஒரு ஹார்மோன் இருக்குதாம். அதாவது, இந்த (?) ஹார்மோன் இருந்தால் காபா புரதத்தால் கல்வித் திறன் பாதிக்கப்படாமல், இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுமாம்?! “Stress steroid THP” என்பதுதான் அந்த ஹார்மோன்! அட…இது நல்லாருக்கே!

இதே மாதிரி வயசுப்பசங்கலும் புத்திசாலியா மாறுவதற்க்கு ஒரு ஹார்மோன் இருந்தால் எப்படியிருக்கும்னு கொஞ்சம் கற்பனை செஞ்சுப் பாருங்க!.